Oct 16, 2008

எண்ணப்பதிவுகள்



எது சாத்தியம்

நினைக்க மறுக்கிறாய் !
மறக்க நினைக்கிறேன்
எது சாத்தியம்
உயிர் விடுவது ஒன்றே

குழந்தை தொழிலாளர்கள்

" இங்கு குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படவில்லை "
ஒவ்வொரு கடைகளிலும் ஓட்டினான் எட்டு வயது சிறுவன் !


மேல்தட்டு மக்களிடம்

கூலி செய்பவனும் கைவிடமாட்டன் பேறு காலத்தில்.
காசு கொட்டிக்கொடுத்தாலும் காணவில்லை மனிதாபிமானம்.


கனவில் கலந்தவளே

பத்து திங்கள் உன் பளிங்கு முகம் காண
வற்றாத வாந்தியால் தொண்டை வறண்ட போதும் !
முன்னுறு மீட்டரை கடக்க வாங்காத மூச்சு
முற்றத்தை கடக்கையில் வாங்கியபோதும் !
கண்ணருகே ஆயிரம் இருந்தும் நான் மட்டும் குதிரை கடிவாளம்
போட்டது போல் உனக்காக காத்திருந்தேன்.
நீ மட்டும் ஏனடி நான்கு திங்களில்?

என்னவளே , என் கனவில் கலந்தவளே
ஏன் கருவில்
கலைந்தாய்

உனக்கு என் வேதனை புரிந்திருந்தால்
போராடி இருப்பாயோ !
இந்த சமுதாய குருடர்களை எதிர்த்து....


The expectant mother , who was undergone abortion recently . she cann’t avoid the family and society to abortion the female child.

So she talks with her fetus (which is not exist)

“Why didn’t you struggle with them to exist ? ”

Written on June 2005 against female infanticide