Apr 18, 2010

எனது நாட்கள்

கவலையும்  கண்ணிரும்  மனதைப் பிசைக்க,

                நம்பிக்கையிழந்த சில நாட்கள்.

நாமும் முன்னேறுவோம் என்று , நம்பிக்கை

               துளிர்விட்ட சில நாட்கள்.

 

நமக்கு உதவுபவர்களை நினைத்து, அவர்கள் போல்

              வாழ ஏங்கிய சில நாட்கள்.

பிறர் செய்த தவறுக்கு, நாமே முன்வந்து

            மன்னிப்பு கேட்ட சில நாட்கள்.

 

இலட்சியத்தையும், நிகழ்காலத்தையும் நினைத்து,

           தூங்காமல் அழுத சில இரவுகள்.

வெற்றிகளுக்குப் பரிசாய் கண்ணிரும்,

தோல்விகளுக்குப் பரிசாய்  வைராக்கியமும்

           தந்த சில நாட்கள்.

 

சாதிக்க முயன்று சிறுகல் சறுக்கியதால், மனம்

          வெதும்பிய சில நாட்கள்.

நம்பிக்கையின்றி நடைபிணமாய்

            சில நாட்கள்.

 

விற்பனைக்கில்லை

உயிரற்ற பொருளை எல்லாம்

           உனதாக்கும் முயற்சியில்,

உயிருள்ள உறவுகளை வீதியிலே

           எறிவாயோ ??

 

காசிருந்தால் கிடைத்து விடும்

         என்று நினைப்பாயோ!!

நிம்மதி விற்பனைக்கு என்றுமில்லை

          பூமியிலே!!

     

சாமியாத்தா

 

உன் புருவங்கள் உயரும்போது வரும்

          முதல் வார்த்தை அய்யோ சாமியாத்தா!!

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சொன்னாலும்,

           எதிரே சொல்வது போல் எப்போதும் ஒலிக்கிறது.

சின்னச் சின்ன வெற்றிகளையும் சிறு

             பிள்ளைபோல்  சொல்கிறேன்.

உன்னிடமிருந்து வரும் வார்த்தை

             அய்யோ சாமியாத்தா!!!!

Apr 17, 2010

அமிக்டலா

உணர்ச்சிக்கும்  அறிவுக்கும்  இடைப்பட்ட போராட்டம்.

இறுதியில் வெல்வது நம்முடைய அமிக்டலா.

                                                                 

அமிக்டலா(Amygdala) அறிமுகம்.

        அமிக்டலாதான் மனித உணர்வுகளின்  நிபுணர்.

        மூளையின் இரண்டு பக்கமும், பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டுள்ள சிறிய பாதாம் பருப்பு  அளவிலுள்ள உறுப்பு.

       

        நமது  பயம், கோபம், வெறுப்பு, ஆத்திரம், அகங்காரம், அன்பு, கனிவு, துக்கம், சோகம் – அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைதான் இந்த அமிக்டலா.

தன் காதலிக்காகத் தாஜ்மகாலைக் கட்டச் சொன்னதும்,

காவி தரித்தவரையும் காமம் கொள்ளச் செய்வதும்,

தன்னைக் காலால் உதைத்த சிறைக்காவல் அதிகாரிக்கு,

தன் கையால் செருப்பு தைத்து கொடுக்குமளவிக்கு ’காந்தியை

கனியச் செய்ததும் இந்த அமிக்டலாதான்.

காந்தியின் மேல் வெறுப்புக் கொண்டு ‘கோட்சேவைக்’

கொல்லத் தூண்டியதும் இந்த அமிக்டலாதான்.

இந்த அமிக்டலாவுடன் மோதிப்பார்க்கும் நபர் பகுத்தறிவு.

அதாவது நியொகார்டெக்ஸ்.

 

         நியொகார்டெக்ஸ்தான் நடப்பதைப் புரிந்து கொண்டு, செய்திகளை யொசித்து, ’இப்படி செய்யலாம்’ என்று அமிக்டலாவுக்கு சொல்பவர்.

 

     ஆனால் சில ஆபத்தான சமயங்களில் செய்தி நியொகார்டெக்ஸ்க்கு செல்லாமலேயே அமிக்டலாவுக்குச் சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுகிறது.

Apr 11, 2010

மறக்க வழி சொல்

நமக்குள் இருக்கும் இடைவெளியை அதிகரிக்க,
       உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
சண்டை போடுகிறென்.


நீயோ ஒவ்வொரு முறையும்
      இடைவெளியைக் குறைக்கிறாய்.

பார்க்கும் ஒவ்வொரு உருவத்திலும்
     உன் முகங்கள்.
பாதையொரங்களில் சிதறிய பூக்களில்,
    உன் புன்னகை.


வீதியில் உள்ள கடைகள் அனைத்திலும்
     உன் பெயர் பொரித்த பெயர்ப்பலகைகள்.
பேருந்தில் ஏறும் போதெல்லாம், நீ ஏறிய
     படிகள்,  அமர்ந்த இருக்கை.



இந்த உலகமே வேண்டாம் என வெறுத்து,
      வீடு திரும்பினால், கண்ணாடியிலும்
கணித்திரையிலும் சிரிக்கிறாய்.


முகம் அழம்பி தேநீர் பருக எண்ணி,
      குழாயினைத் திருப்பினால்
நீ கை கழுவும் சப்தம்.



வெறுத்து விட்டு, முகம் துடைக்க
     துவாலை எடுக்கிறென்.
அதில் கூடவா உன் வாசனை.


தூக்கத்தை விரும்பி தலையணையில்
      புதைகிறேன்.  தலையணை
முழுவதும் உன் மூச்சு.



இந்த் அவஸ்தை வேண்டாம் எனக்கு,
         என்னைக்  காப்பாற்று.
உன்னை மறக்க வழி சொல்.






பத்திரம்



ஊரெல்லாம் தேடினேன் உயர்ந்த பொருள் பரிசளிக்க,

பூக்கள் பரிசளிக்க விரும்பினென்,
       உன் மென்மையை எண்ணி,
ஆனால் அவை வாடும்போது,
       நீ வருந்துவதை நான் விரும்பவில்லை.

புத்தகம் பரிசளிக்க விரும்பினென், 
       உன் வார்த்தைகளை எண்ணி,
ஆனால் நீயோ வாழ்க்கையைப் படித்தவன்.


ஆடைகள் பரிசளிக்க விரும்பினென்,
       உன் ஆளுமையை எண்ணி,
ஆனால் நீயோ ஆடைச் சரணாலயத்தில் வசிப்பன்.

இறுதியில் , தோல்வியுடன் நடக்கையில்
        என் மனம் சொல்லிற்று.
நட்பைவிட உயர்ந்தது வேரொன்றுமில்லை என்று.

ஆதலால்

இதொ, உனக்கு ஒரு பத்திரம் என் கையொப்பமிட்டு,

நான் சாகும் வரை நீ என் நண்பன் என்று.


என் முதல் கவிதை.
      
               

Apr 6, 2010

அன்பு நண்(அன்)பருக்கு

உன் சொல்லெல்லாம் செயலாகும் , ஒரு

புன்னகையால் சொல்லிவிட்டால் .

அரளிப்பூ பறிக்க ஆயுதம் தேவையில்லை ,

அறிவில்லா ஆயுதம் ஆளையே கொன்றுவிடும்.

பிறர்மேல் கொள்ளும் வெறுப்பு

தன்னையே அழிக்குமல்லோ !

அகங்காரத்துடன் வாழ்தால்

அமைதி என்றுமில்லை.

தாழ்வு மனப்பான்மையால் மனம்

புழுங்க வேண்டா.

இங்கு ஒப்பிட எதுவுமில்லை.

நம் பிறப்பே அற்புதம் தான்.

தோல்வி எண்ணத்தால்

துவண்டு போகவேண்டா

உற்ற காலம் வரும்

உற்சாகத்துடன் செயலாற்று.

கொள்கையில் பிடிப்பு இருந்தால்

ஆற்றல் எல்லாம் நமக்குள்ளே !

மலையை நகர்த்துபவர்கள் சிறு

கல்லுக்கே கலங்கலாமா ?

எட்டாத மலை என்று எட்டி நிற்கலாமா ?

எட்டி வைத்தால் தொட்டு விடலாம்

எல்லா மலையையுமே .

ஊர் வாய் பேசும்மப்பா , உன்

செவிப்பறையை மூடிவிடு.

வட்டத்தை வகுத்து கொண்டு , வெளியே

வர மறுக்கிறாயே !

உள்ளே ஓர் தடை இருந்தால் , வெளி

வாய்ப்புக்கள் என்ன செய்யும் .

நமக்கு நாமே பகையாயின் , காளி தேவியே

வந்தாலும் காப்பாற்ற முடியாது.

மனதை உன் வசமாக்கு

உலகம் உன் காலடியில்.

சிந்தித்து பாரப்பா , சித்தம் தெளிந்துவிடும்

பொருளில்லாப் பொன்தாலி

 

உறவெல்லாம் கூடி நின்று உரிய

       பொருள் கொடுத்து , கொல்லன்

கும்பிட்டு செய்து கொடுத்த

       ஒய்யாரப் பொன் தாலி.

காண்பவர் கண் நிறைய பக்திப்

        பரவசத்தில் இரு உள்ளங்களையும்

இணைத்தே முடிந்த முதல் தாலி.

    

ஊரில் ஒருவர் அணியவில்லை என்

       மருமகளைப் போல் என்று ,மார்தட்டும்

மாமியார்களின் பெருமிதத் தாலி.

எத்தனையோ நகைகள் எடுப்பாய் ஜோலி

     ஜொலிக்க என் மதிப்பு வேறென்று எள்ளி

நகையாடும் சிங்காரப் பொன்தாலி.

காசில்லா தனலக்ஷ்மிகளுக்கும் ,

      கணவனில்லா சுமங்கலிகளுக்கும் எட்டாக்

கனியாய் இனிக்கும் ஏற்றமிகு பொன்தாலி.

கட்டிய கணவனே கண்கண்ட தெய்வமென்று

     கடமை புரியும் காவியத்

தலைவிகளின் கண்ணியத் தாலி.

தன் அகங்காரம் வாழ , கர்ப்பிணிகளை

     கைவிடும் ஏகபத்னி விரதர்களின்

பொறுப்பில்லாப் பொன்தாலி.

தன் குழந்தைகளின் பசி போக்க ,

     தன்மானத்துடன் வாழும் தைரிய லக்ஷிமிகளின்

தரமில்லா பொன் தாலி.

சிலம்பு உடைத்து , நியாயம் கேட்டவளின்

      வாரிசுகள் இன்று தாலி புனைந்தும்

நிராயுதபாணிகளாய் !!

தாலிக்கு பொருள் இல்லை

பொன்னுக்கு பொருள் உண்டு.

தாலிக்கு பொருள் இல்லை.( இந்த உலகில் )

பொன்னுக்கு பொருள் உண்டு ( அடகு கடையில் ).

Apr 5, 2010

க்ஷுட ரூபேண

வாயிலில்

கையேந்தும் குழந்தையை விரட்டி விட்டு

       கமலாம்பிகைக்கு கனியால் அலங்காரம்.

ஒரு கனியேனும் அன்னை ஏற்பாளா ?

வாசலில் குழந்தை பசித்திருக்க

     வடிவாம்பாள் எப்படிப் புசித்திருப்பாள் ?

பொறுப்பற்ற பெற்றோர் பெற்ற குழந்தை

    வாயிலில் கையேந்தியே வளர்ந்து விட்டாள்(ன்).

படைப்பை பழித்து பயனில்லை,

     இனியும் இவன்(ள்) போல் ஒரு குழந்தை

பிறவாமல் இருக்க வழி செய்வோம்.

பணத்தை பெருக்கும் சீமானே

    பசியின் உருவிலும் அவள்தானே.(க்ஷுட ரூபேண )

பசிக்கு ஒரு பழம் தந்து விடு.

     அத்தனை கனிகளையும் அம்பிகை ஏற்பாள்.

யா தேவி சர்வபூதேஷு க்ஷுட ரூபேண சம்ச்திட.

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமாஹ்

Slokas from Devi mahatmyam, glorifies all pervading nature of Divine mother who is present in every being,every action,every emotion and sustaining power.

யா தேவி சர்வபூதேஷு க்ஷுட ரூபேண சம்ச்திட     ( பசியின் உருவிலும் அவள்தானே.) (clink the link)

Divine Mother who abides in all beings in the form of hunger.

Apr 2, 2010

காதல்


பார்வை

நீ யார் என்பதை உணர்தேன்
உன் ஓரப் பார்வை என்
உயிர் தொட்ட போது

இதயம்

ஒற்றை மயிலிறகை ஊரெல்லாம் தேடியவள்
இதயம் தொலைந்தும் தேடாமல் இருக்கிறேன்

மழை

நீ வரும்போது மட்டுமே மழை வருகிறது
நான் யாரை வரவேற்பது !
ஒவ்வொரு துளியிலும் உன்
வைரப் புன்னகை
ஜன்னலோர சாரல்களின் குறும்பு உன்
கைவிரலை மிஞ்சுகிறது
எதிர்பாராத நேரத்தில் பயமுறுத்த எப்போது
கற்றுகொடுத்தாய் இந்த இடி மின்னல்களுக்கு


வாசுகி


வாழ்க்கை

விரும்பியதெல்லாம் விட்டுகொடுத்தபிறகும்

வாழவே பிடித்திருக்கிறது மற்றவர்களுக்காக !!


எனது மொழி

கண்ணீரின் வார்த்தைகள் புரியுமனில்

ஊமையாக இருக்கவே விருப்பம்


மழை வாசனை

கவிதை பேசி திரிந்த காலங்களை நினைக்கையில்

விழியோரம் பெய்த மழையில் விசியது உன் வாசனை


வலிகள்

வார்த்தைகளால் வார்க்கிறேன்

வலிக்காது என்பதால்

உயிர் கொடுக்கிறேன்

சாதிக்கும் என்பதால்