Apr 6, 2010

அன்பு நண்(அன்)பருக்கு

உன் சொல்லெல்லாம் செயலாகும் , ஒரு

புன்னகையால் சொல்லிவிட்டால் .

அரளிப்பூ பறிக்க ஆயுதம் தேவையில்லை ,

அறிவில்லா ஆயுதம் ஆளையே கொன்றுவிடும்.

பிறர்மேல் கொள்ளும் வெறுப்பு

தன்னையே அழிக்குமல்லோ !

அகங்காரத்துடன் வாழ்தால்

அமைதி என்றுமில்லை.

தாழ்வு மனப்பான்மையால் மனம்

புழுங்க வேண்டா.

இங்கு ஒப்பிட எதுவுமில்லை.

நம் பிறப்பே அற்புதம் தான்.

தோல்வி எண்ணத்தால்

துவண்டு போகவேண்டா

உற்ற காலம் வரும்

உற்சாகத்துடன் செயலாற்று.

கொள்கையில் பிடிப்பு இருந்தால்

ஆற்றல் எல்லாம் நமக்குள்ளே !

மலையை நகர்த்துபவர்கள் சிறு

கல்லுக்கே கலங்கலாமா ?

எட்டாத மலை என்று எட்டி நிற்கலாமா ?

எட்டி வைத்தால் தொட்டு விடலாம்

எல்லா மலையையுமே .

ஊர் வாய் பேசும்மப்பா , உன்

செவிப்பறையை மூடிவிடு.

வட்டத்தை வகுத்து கொண்டு , வெளியே

வர மறுக்கிறாயே !

உள்ளே ஓர் தடை இருந்தால் , வெளி

வாய்ப்புக்கள் என்ன செய்யும் .

நமக்கு நாமே பகையாயின் , காளி தேவியே

வந்தாலும் காப்பாற்ற முடியாது.

மனதை உன் வசமாக்கு

உலகம் உன் காலடியில்.

சிந்தித்து பாரப்பா , சித்தம் தெளிந்துவிடும்

பொருளில்லாப் பொன்தாலி

 

உறவெல்லாம் கூடி நின்று உரிய

       பொருள் கொடுத்து , கொல்லன்

கும்பிட்டு செய்து கொடுத்த

       ஒய்யாரப் பொன் தாலி.

காண்பவர் கண் நிறைய பக்திப்

        பரவசத்தில் இரு உள்ளங்களையும்

இணைத்தே முடிந்த முதல் தாலி.

    

ஊரில் ஒருவர் அணியவில்லை என்

       மருமகளைப் போல் என்று ,மார்தட்டும்

மாமியார்களின் பெருமிதத் தாலி.

எத்தனையோ நகைகள் எடுப்பாய் ஜோலி

     ஜொலிக்க என் மதிப்பு வேறென்று எள்ளி

நகையாடும் சிங்காரப் பொன்தாலி.

காசில்லா தனலக்ஷ்மிகளுக்கும் ,

      கணவனில்லா சுமங்கலிகளுக்கும் எட்டாக்

கனியாய் இனிக்கும் ஏற்றமிகு பொன்தாலி.

கட்டிய கணவனே கண்கண்ட தெய்வமென்று

     கடமை புரியும் காவியத்

தலைவிகளின் கண்ணியத் தாலி.

தன் அகங்காரம் வாழ , கர்ப்பிணிகளை

     கைவிடும் ஏகபத்னி விரதர்களின்

பொறுப்பில்லாப் பொன்தாலி.

தன் குழந்தைகளின் பசி போக்க ,

     தன்மானத்துடன் வாழும் தைரிய லக்ஷிமிகளின்

தரமில்லா பொன் தாலி.

சிலம்பு உடைத்து , நியாயம் கேட்டவளின்

      வாரிசுகள் இன்று தாலி புனைந்தும்

நிராயுதபாணிகளாய் !!

தாலிக்கு பொருள் இல்லை

பொன்னுக்கு பொருள் உண்டு.

தாலிக்கு பொருள் இல்லை.( இந்த உலகில் )

பொன்னுக்கு பொருள் உண்டு ( அடகு கடையில் ).

Apr 5, 2010

க்ஷுட ரூபேண

வாயிலில்

கையேந்தும் குழந்தையை விரட்டி விட்டு

       கமலாம்பிகைக்கு கனியால் அலங்காரம்.

ஒரு கனியேனும் அன்னை ஏற்பாளா ?

வாசலில் குழந்தை பசித்திருக்க

     வடிவாம்பாள் எப்படிப் புசித்திருப்பாள் ?

பொறுப்பற்ற பெற்றோர் பெற்ற குழந்தை

    வாயிலில் கையேந்தியே வளர்ந்து விட்டாள்(ன்).

படைப்பை பழித்து பயனில்லை,

     இனியும் இவன்(ள்) போல் ஒரு குழந்தை

பிறவாமல் இருக்க வழி செய்வோம்.

பணத்தை பெருக்கும் சீமானே

    பசியின் உருவிலும் அவள்தானே.(க்ஷுட ரூபேண )

பசிக்கு ஒரு பழம் தந்து விடு.

     அத்தனை கனிகளையும் அம்பிகை ஏற்பாள்.

யா தேவி சர்வபூதேஷு க்ஷுட ரூபேண சம்ச்திட.

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமாஹ்

Slokas from Devi mahatmyam, glorifies all pervading nature of Divine mother who is present in every being,every action,every emotion and sustaining power.

யா தேவி சர்வபூதேஷு க்ஷுட ரூபேண சம்ச்திட     ( பசியின் உருவிலும் அவள்தானே.) (clink the link)

Divine Mother who abides in all beings in the form of hunger.