ஆட்சி
மாறுது, காட்சி மாறுது, கண்ணீர் மாறல சாமியோ
விவசாயி, கண்ணீர் மாறல சாமியோ
தலைவர்கள்
பேட்டி மாறுது, பணப்பெட்டி மாறுது, வாழ்க்கை மாறல சாமியோ
அடிதட்டு மக்கள், வாழ்க்கை மாறல சாமியோ
விளை
நிலமெல்லாம், வீடாகிபோனாலும், வீதியில் தூங்குது சாமியோ
ஒரு கூட்டம், வீதியில் தூங்குது சாமியோ
கல்வி
பெருகுது, செல்வம் பெருகுது, தன்மானம் வளரல சாமியோ
மக்கள் மனதில், தன்மானம் வளரல சாமியோ
ஆலயமும் போய் அனுதினமும் தொழுதாலும் அன்பு வளரல சாமியோ
அடுத்தவன் மேல் அன்பும் வளரல சாமியோ.