Apr 17, 2010

அமிக்டலா

உணர்ச்சிக்கும்  அறிவுக்கும்  இடைப்பட்ட போராட்டம்.

இறுதியில் வெல்வது நம்முடைய அமிக்டலா.

                                                                 

அமிக்டலா(Amygdala) அறிமுகம்.

        அமிக்டலாதான் மனித உணர்வுகளின்  நிபுணர்.

        மூளையின் இரண்டு பக்கமும், பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டுள்ள சிறிய பாதாம் பருப்பு  அளவிலுள்ள உறுப்பு.

       

        நமது  பயம், கோபம், வெறுப்பு, ஆத்திரம், அகங்காரம், அன்பு, கனிவு, துக்கம், சோகம் – அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைதான் இந்த அமிக்டலா.

தன் காதலிக்காகத் தாஜ்மகாலைக் கட்டச் சொன்னதும்,

காவி தரித்தவரையும் காமம் கொள்ளச் செய்வதும்,

தன்னைக் காலால் உதைத்த சிறைக்காவல் அதிகாரிக்கு,

தன் கையால் செருப்பு தைத்து கொடுக்குமளவிக்கு ’காந்தியை

கனியச் செய்ததும் இந்த அமிக்டலாதான்.

காந்தியின் மேல் வெறுப்புக் கொண்டு ‘கோட்சேவைக்’

கொல்லத் தூண்டியதும் இந்த அமிக்டலாதான்.

இந்த அமிக்டலாவுடன் மோதிப்பார்க்கும் நபர் பகுத்தறிவு.

அதாவது நியொகார்டெக்ஸ்.

 

         நியொகார்டெக்ஸ்தான் நடப்பதைப் புரிந்து கொண்டு, செய்திகளை யொசித்து, ’இப்படி செய்யலாம்’ என்று அமிக்டலாவுக்கு சொல்பவர்.

 

     ஆனால் சில ஆபத்தான சமயங்களில் செய்தி நியொகார்டெக்ஸ்க்கு செல்லாமலேயே அமிக்டலாவுக்குச் சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுகிறது.

Apr 11, 2010

மறக்க வழி சொல்

நமக்குள் இருக்கும் இடைவெளியை அதிகரிக்க,
       உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
சண்டை போடுகிறென்.


நீயோ ஒவ்வொரு முறையும்
      இடைவெளியைக் குறைக்கிறாய்.

பார்க்கும் ஒவ்வொரு உருவத்திலும்
     உன் முகங்கள்.
பாதையொரங்களில் சிதறிய பூக்களில்,
    உன் புன்னகை.


வீதியில் உள்ள கடைகள் அனைத்திலும்
     உன் பெயர் பொரித்த பெயர்ப்பலகைகள்.
பேருந்தில் ஏறும் போதெல்லாம், நீ ஏறிய
     படிகள்,  அமர்ந்த இருக்கை.



இந்த உலகமே வேண்டாம் என வெறுத்து,
      வீடு திரும்பினால், கண்ணாடியிலும்
கணித்திரையிலும் சிரிக்கிறாய்.


முகம் அழம்பி தேநீர் பருக எண்ணி,
      குழாயினைத் திருப்பினால்
நீ கை கழுவும் சப்தம்.



வெறுத்து விட்டு, முகம் துடைக்க
     துவாலை எடுக்கிறென்.
அதில் கூடவா உன் வாசனை.


தூக்கத்தை விரும்பி தலையணையில்
      புதைகிறேன்.  தலையணை
முழுவதும் உன் மூச்சு.



இந்த் அவஸ்தை வேண்டாம் எனக்கு,
         என்னைக்  காப்பாற்று.
உன்னை மறக்க வழி சொல்.






பத்திரம்



ஊரெல்லாம் தேடினேன் உயர்ந்த பொருள் பரிசளிக்க,

பூக்கள் பரிசளிக்க விரும்பினென்,
       உன் மென்மையை எண்ணி,
ஆனால் அவை வாடும்போது,
       நீ வருந்துவதை நான் விரும்பவில்லை.

புத்தகம் பரிசளிக்க விரும்பினென், 
       உன் வார்த்தைகளை எண்ணி,
ஆனால் நீயோ வாழ்க்கையைப் படித்தவன்.


ஆடைகள் பரிசளிக்க விரும்பினென்,
       உன் ஆளுமையை எண்ணி,
ஆனால் நீயோ ஆடைச் சரணாலயத்தில் வசிப்பன்.

இறுதியில் , தோல்வியுடன் நடக்கையில்
        என் மனம் சொல்லிற்று.
நட்பைவிட உயர்ந்தது வேரொன்றுமில்லை என்று.

ஆதலால்

இதொ, உனக்கு ஒரு பத்திரம் என் கையொப்பமிட்டு,

நான் சாகும் வரை நீ என் நண்பன் என்று.


என் முதல் கவிதை.