Apr 17, 2010

அமிக்டலா

உணர்ச்சிக்கும்  அறிவுக்கும்  இடைப்பட்ட போராட்டம்.

இறுதியில் வெல்வது நம்முடைய அமிக்டலா.

                                                                 

அமிக்டலா(Amygdala) அறிமுகம்.

        அமிக்டலாதான் மனித உணர்வுகளின்  நிபுணர்.

        மூளையின் இரண்டு பக்கமும், பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டுள்ள சிறிய பாதாம் பருப்பு  அளவிலுள்ள உறுப்பு.

       

        நமது  பயம், கோபம், வெறுப்பு, ஆத்திரம், அகங்காரம், அன்பு, கனிவு, துக்கம், சோகம் – அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைதான் இந்த அமிக்டலா.

தன் காதலிக்காகத் தாஜ்மகாலைக் கட்டச் சொன்னதும்,

காவி தரித்தவரையும் காமம் கொள்ளச் செய்வதும்,

தன்னைக் காலால் உதைத்த சிறைக்காவல் அதிகாரிக்கு,

தன் கையால் செருப்பு தைத்து கொடுக்குமளவிக்கு ’காந்தியை

கனியச் செய்ததும் இந்த அமிக்டலாதான்.

காந்தியின் மேல் வெறுப்புக் கொண்டு ‘கோட்சேவைக்’

கொல்லத் தூண்டியதும் இந்த அமிக்டலாதான்.

இந்த அமிக்டலாவுடன் மோதிப்பார்க்கும் நபர் பகுத்தறிவு.

அதாவது நியொகார்டெக்ஸ்.

 

         நியொகார்டெக்ஸ்தான் நடப்பதைப் புரிந்து கொண்டு, செய்திகளை யொசித்து, ’இப்படி செய்யலாம்’ என்று அமிக்டலாவுக்கு சொல்பவர்.

 

     ஆனால் சில ஆபத்தான சமயங்களில் செய்தி நியொகார்டெக்ஸ்க்கு செல்லாமலேயே அமிக்டலாவுக்குச் சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுகிறது.

No comments: